Friday 10 February 2017

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு....!!!
.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.
ஷஹீஹ் புகாரி 7138
.
(முஹம்மதே!) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்குச் செல்வத்தை அளிக்கிறோம். (இறை) அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு.
அல் குர்ஆன் 20:132.
.
உறவுகளே.....!!!
.
தொழுகை இல்லாதவனின் எந்த அமல்களும் இறைவனிடம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தொழுகை இம்மை வாழ்க்கையில் முழு தூய மனிதனாக்கும் அறிய மருந்து. மறுமையில் சுவர்க்கம் செல்ல துனை இருக்கும் துனை தொழுகை, தீய எண்ணங்களைவிட்டும்,தீய செய்ல்களைவிட்டும் தொழுகை நம்மை நிச்சயமாக தடுக்கும், ஒரு சாலிஹான மதிப்பும் மறியாதையையும் உடைய மணிதராக நம்மை நிச்சயம் வாழ வைக்கும். எனவே எக்காரணம் கொண்டும் தொழுகையை விட்டுவிடாதீர்கள். தொழுகையை முடிந்தவரை அதன் நேரத்தில் தொழுதுவிடுங்கள். ஆண்கள் கண்டிப்பாக மஸ்ஜித் சென்று தொழுகுங்கள்,பெண்கள் வசதி வாய்ப்பு இருப்பின் மஸ்ஜித் செல்லுங்கள். ஆண்களுக்கு மஸ்ஜித் சென்று தொழ தொழுகை நேரம் தவறும் என்னும் பட்சத்தில் வீட்டிலேயே உங்கள் குடும்பத்துடன் ஜமாத்தாக தொழ பழகுங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் அன்புடன் அறிவுறை சொல்லி தொழ உற்ச்சாகமூட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை மட்டும் தொழும் சமுதாயமாக அன்னல் பெருமனார் முஹம்ம்து (ஸல்) அவர்களை மட்டும் பின்பற்றும் சமுதாயமாக உருவாக எல்லாம் வல்ல இறைவன் துனை செய்வானாக....ஆமீன்.
.
.
ஜஸாக்குமுல்லாஹ் கைரன் கசீரா...!!!
: லுத்ஃபி. அண்ணா!!!

No comments:

Post a Comment