Monday 30 January 2017

#மீள்

பெண்களின் வலியென்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிரசவ வலி மட்டும் தான்...

ஆனால் அவர்கள் பெரியவள் ஆனா நாள் முதல் முதிர் பருவம் அடையும் வரை அவள் மாதம் மாதம் படும் இயற்கை வலியை யாரும் அறிவது இல்லை..

குழந்தை பிறகும் அந்த பத்து மாதம் தான் அவள்
இடுப்பு வலி மற்றும் வயற்று வலி வரும் என்று சில ஆண்கள் நினைத்து உள்ளனர்.
பெண்ணாய் பிறந்த ஒருவ்வொரு வரும் எந்த வலியை அனுபவித்து வருகின்றனர்..

அந்த காலத்தில் பெண்கள் இயற்கை உணவில் இருந்து பலத்தை பெற்றனர் அதனால் அந்த காலத்து பெண்கள் இன்றும் இந்த வலியை அனுபவிப்பது இல்லை ஆனால் இந்தக்கால பெண்ணால் வலியை அனுப்பவிக்கின்றன..

என்னென்றால் அவர்கள் உணவு மாற்றம் அதிகஅளவு அவர்கள் வெளிய பாக்கட்டில் உள்ள ஊட்டச்சத்து இல்லாத உணவுவை அதிகம் விரும்புகின்றனர்.. அதனால் பெண்ணால் அதிகம் பாதிப்பு அடைகின்றனர்..

இனி இந்த பழக்கத்தை குறைத்து கொண்டு இரும்பு சத்து அதிகம் உள்ள உணவை அதிகம் உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்..

அதிகமாக பேரிசைப்பழம், தேன், உளுந்தம்பருப்பு , முருங்கைக்கீரை, வாழைப்பழம், காய்கள் அதிகம் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்..

என் சகோதரிகள் இனி வலியால் கஷ்ட படவேண்டாம். :)

பெண்களை மட்டும் மதிப்போம் என்று கூறுவதை விட அவர்களின் வலியை மதித்து அன்பை செலுத்துவோம்..

இது ஒவ்வொரு ஆணின் கடமை :)

மத்ஹபு ஒரு பார்வை

முகநூல் வாட்ஸப் மத்ஹப் காப்பார்கள் பதில் சொல்வார்களா? 

https://absaaysha.blogspot.com/2017/01/blog-post_30.html?m=1

الهداية شرح البداية -  )1/81-82
ومن شك في صلاته فلم يدر أثلاثا صلى أم أربعا وذلك أول ما عرض له استأنف لقوله عليه الصلاة والسلام إذا شك أحدكم في صلاته أنه كم صلى فليستقبل الصلاة

தொழுகையில் ஒருவர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் வந்தால் அவர் தொழுகையை மீண்டும் தொழட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஹிதாயா, பாகம் 2, பக்கம் 81-82

இந்த மத்ஹபில் குறிப்பிடும் இந்தச் செய்தியை நபிகளார் எங்கே சொன்னார்கள்? யாரிடத்தில் சொன்னார்கள்? என்பதற்கு மத்ஹபு ஆதரவாளர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

இதில் குறிப்பிடும் இதே பிரச்சனைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் அழகிய தீர்வு நமக்குச் சொல்லப்பட்டுள்ளது.

உங்களில் ஒருவருக்கு, மூன்று ரக்அத்கள் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா? என்று சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதி உள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுது விட்டு, ஸலாம் கொடுப்பதற்கு முன் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்! அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்கள் அத்தொழுகையை இரட்டைப்படை ஆக்கி விடும். அவர் நான்கு ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும் (தொழுகைகளில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக ஆகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) 
நூல்: முஸ்லிம் 990

தொழுகையில் சந்தேகம் வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நபிகளார் பொதுவாக வழிகாட்டியிருக்க 

மத்ஹப் நூலாசிரியரோ அந்தச் சந்தேகம் வந்தால் மீண்டும் தொழவேண்டும் என்று  ஆதாரமின்றி பதிந்துவுள்ளார்.

அதையடுத்து சந்தேகம் வந்தால் தொழுகையைத் திரும்பத் தொழ வேண்டும் என்று கூறியதோடு நில்லாமல் இதை நபியின் பெயரால் சொல்லியது அவர் செய்த மிகப்பெரிய பிழையாகும்.

ஜஸாக்கல்லாஹூ ஹைரன் அப்ஸா Blog

தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிஞர்கள் மக்களிடையே உரையாற்றிடும் போது அறியாமல் ஹதீஸ்களைத் தவறுதலாகக் கூறி விட்டால் கூட அதற்காக வானத்திற்கும் பூமிக்கும் துள்ளிக்குதித்து எக்காளமிடும் மத்ஹபுக்கூட்டம் நபி சொல்லாததை நபி சொன்னதாக தாங்கள் போற்றும் மத்ஹபு அறிஞர்கள் சொல்லியமைக்கு மௌனம் காப்பதேன்? அவமானகரமான மௌனமிது என்பதில் அறிவுடையோர் சந்தேகிக்க மாட்டார்கள்.

Sunday 29 January 2017

ஆயிரம் அவதூறுகளை தாண்டி கொளுந்துவிட்டு எரியும் அல்லாஹ்வின் ஜோதி..!

கோவையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி.திரிஷ்யா..!

அல்ஹம்துலில்லாஹ்

நாள்:25.01.2017
TNTJ, கோவை வடக்கு மாவட்டம்
கேள்வி :

 பிறந்தநாள், பெயர்சூட்டுதல்,கத்னா செய்தல் போன்றவற்றிற்காகவீடுவீடாக இனிப்பு கொடுத்துவிடுதல்,கர்ப்பிணிப்பெண்ணுக்கு ஏழாவது மாதம்ஆனதும் பாகுச்சோறு ஆக்கி பகிர்தல்,சிறுவர்,சிறுமியர் குர்ஆனை முழுமையாகஓதிமுடித்துவிட்டால் அதற்காக இனிப்புகொடுத்துவிடுதல், மரணித்தவர்க்காக
40ஆம் நாள் ஃபாதிஹா ஓதி பெட்டிச்சோறுபோடுதல், மரணித்தவர் வீட்டிற்குச்சென்றால் அங்கு வாழைப்பழம் கொடுத்தல்-இவையெல்லாம் எங்கள் ஊரில் நடைமுடைப்படுத்தப்படும் சடங்கு சம்பிரதாயங்கள்.நாம் இவற்றில் கலந்துக்கொள்ளாவிட்டாலும் நம் வீடு தேடி தின்பண்டங்களைக்கொடுத்துவிடுகிறார்கள். இவற்றை நாம் வாங்கலாமா?
மேலும் வரதட்சணை வாங்கிய மணமகன் வீட்டிலிருந்தும், மற்றும்பெண்வீட்டிலிருந்தும் நமக்கு சாப்பாடு கொடுத்துவிடுகிறார்கள். அதையும்வாங்கிக்கொள்ளலாமா?
 மொத்தம் 9 விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளேன். இவற்றில் எது எதற்கெல்லாம்அனுமதி இருக்கிறது? தயவுசெய்து விரிவாக பதில் தரவும்.

பதில் : நீங்கள் குறிப்பிட்டுள்ள 9 விசயங்களும் மார்க்கத்திற்கு மாற்றமானபித்அத்தான விசயங்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இவற்றைப்புறக்கணிப்பதும், இவற்றை இல்லாமல் ஆக்கப் பாபடுவதும் அனைத்து முஃமின்கள்மீதும் கடமையாகும்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் நாம் கலந்து கொள்ளாவிட்டாலும் நம் வீடு கொடுத்துவிடும் தின்பண்டங்களையும், உணவையும் கொடுத்து விடுகிறார்கள். இவற்றைவாங்கிக் கொள்ளலாமா? எனக் கேட்டுள்ளீர்கள்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள காரியங்களில் இரண்டு வகையானவை இடம் பெற்றுள்ளன.
ஒன்று : அந்தப் பாவமான காரியங்களை புறக்கணிக்க வேண்டும் என்றஅடிப்படையில் அதில் பரிமாறப்படும் உணவை புறக்கணிப்பது. உணவே ஹராம்என்ற அடிப்படையில் அல்ல.
இரண்டாவது : அதல் பரிமாறப்படும் உணவே ஹராம் என்ற அடிப்படையில்உள்ளவை.
மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களான பிறந்தநாள் கொண்டாடுதல் ,பெயர்சூட்டுதல், கத்னா செய்தல், கர்ப்பிணிப்பெண்ணுக்கு ஏழாவது மாதம் ஆனதும்பாகுச்சோறு ஆக்கி பகிர்தல், சிறுவர்,சிறுமியர் குர்ஆனை முழுமையாகஓதிமுடித்துவிட்டால் அதற்காக இனிப்பு கொடுத்துவிடுதல், மார்க்கத்திற்குமாற்றமான திருமணங்கள் போன்றவற்றை முன்னிட்டு தரப்படும் விருந்துநிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று நாம் கூறுகிறோம். இந்தக் காரியங்களைநாம் ஆதரிக்கக் கூடாது என்பதே இதற்குக் காரணம்.
இந்தக் காரியங்களை முன்னிட்டு தரப்படும் விருந்தில் பங்கெடுத்துவிட்டு நான் இந்தக்காரியங்களை ஆதரிக்கவில்லை என்று கூறினால் இந்தக் கூற்றில் எந்த உண்மையும்இல்லை. அந்த விருந்தில் நாம் கலந்து கொள்வதே அதை நாம் ஆதரிக்கின்றோம்என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.
அதே நேரத்தில் இது போன்ற மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களுக்கு மற்றும்விருந்திற்கு நம்மை அழைத்து நாம் போகாவிட்டால் இதை நாம் புறக்கணித்துஇருக்கின்றோம் என்பதை இது போன்ற காரியங்களைச் செய்யக்கூடியவர்கள்விளங்கிக் கொள்கின்றார்கள். இந்த அடிப்படையில்தான் இது போன்ற காரியங்கள்நடைபெறும் சபைக்குச் சென்று அந்த விருந்தில் கலந்து கொள்ளக்கூடாது என்றுகூறுகின்றோம்.
இது போன்ற காரியங்களில் வழங்கப்படும் உணவு உண்பதற்கு ஹராம் என்றஅடிப்படையில் இதை நாம் கூறவில்லை. உணவோ, தின்பண்டங்களோவழங்கப்படாமல் இந்தக் காரியங்கள் நடைபெற்றால் அப்போதும் நாம் இந்தக்காரியங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்றே கூறுகிறோம்.ஏனென்றால் நாம்இவ்வாறு கூறுவதற்கு உணவு காரணமல்ல. மார்க்கத்திற்கு மாற்றமானகாரியங்களுக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்பதே காரணமாகும். உணவளிப்பதும்அதன் ஒரு பகுதியாக இருப்பதால் விருந்தையும் புறக்கணிப்பதே அந்தக் காரியத்தைமுழுமையாக புறக்கணிப்பதாகும்.
மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள், பித்அத்துகள், ஷிர்க்கான காரியங்கள்போன்றவை இது போன்ற காரியங்களில் இடம் பெறுவதால் அந்தப் பாவத்திற்குதுணைபோய்விடக்கூடாது என்பதற்காகவே  நாம் இந்தத் காரியங்களையும்அதையொட்டி நடைபெறும் விருந்துகளையும் புறக்கணிக்கின்றோம். இது போன்றகாரியங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பது அந்த உணவு ஹராம் என்பதற்காகஅல்ல.
மார்க்கத்திற்கு மாற்றமான பாவமான காரியங்களில் கலந்து கொள்ளக்கூடாதுஎன்பதற்கு நாம் கூறிய இந்தக் காரணம் நமது வீட்டில் இருந்து கொண்டு அந்தஉணவை உண்ணும் போது ஏற்படாது. அதாவது இந்த உணவை நமது வீட்டில் இருந்துகொண்டு உண்பதால் அந்தக் காரியங்களை ஆதரிக்கும் நிலை ஏற்படவில்லை. இந்தஉணவை உண்பது மார்க்கத்தில் எந்த அடிப்படையிலும் தவறில்லை என்பதால் இதைஉண்ணுகிறோம்.
நமது வீட்டிற்கு உணவுகளைக் கொடுத்துவிட்டால் அதைப் பெற்றுக் கொள்வதில்தவறில்லை. ஏனெனில் நமது வீட்டிற்கு கொடுத்து விடப்படும் உணவு அன்பளிப்புஎன்ற நிலையை அடைந்து விடுகிறது.
பரீராவுக்கு தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம்கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் '' இது பரீராவுக்குத் தர்மமாகும்.