Wednesday 5 April 2017

ஃபாத்திமா பீர் முஹம்மது பதிவிலிருந்து!!!!

💎ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ💎

#Biological_Clock_System!

#சுபுஹானல்லாஹ்...!!!

நமது உடல் ஓர் அற்புத படைப்பு.  அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!

அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System)!!!

இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது.  அதுதான் பினியல் சுரப்பி!!

கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND; பார்வை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது!!

இந்த பினியல் சுரப்பி; ஓர் அரிய  பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது!!

அதுதான் மெலடோனின் (melatonin)!!

இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது!  புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது என்று இன்று மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளார்கள்!!    

மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்!!

ஆம்!  இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்!!

அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக; அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்!!

ஒவ்வொரு நாளும் இஷாவுக்குப் பிறகு; இருளில் சுரக்கும் மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும்.!!

நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது!!

பினியல் சுரப்பி  மெலடோனினை இஷாவுக்குப் பிறகு சுரக்க ஆர்மபித்து ஃபஜருக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் நிறுத்தி விடும்!!

ஆகவே இரவு  நீண்ட நேரம் கண் விழித்திருந்தால்; நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக ஆவோம்.!!!!

எனவே; இரவு முற்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று  நோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது!!

அதே போன்று; அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும்.  ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால்:; இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான்.!!

இது நமது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!!

ஆக;  இரவு முற்கூட்டியே உறங்குவதால்; மெலடோனின் கிடைக்கிறது! அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்; ஓஸோன் கிடைக்கிறது!!

நமது உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது!!!

இதனைத்தான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே; அண்ணல் நபிகளார் அவர்கள் அழகுற எடுத்துக் கூறினார்கள்!!

அற்புதமாக வாழ்ந்தும் காட்டினார்கள்! அவர்களது வாழ்க்கை முறை; இஷாவுக்குப் பின் உடனே உறங்கி முன் அதிகாலையில் தஹஜ்ஜத்துக்கு எழும் வழக்கம் உடையதாக  இருந்தது!!

அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன!!

அதிகாலையில் எழும்போது; நமது மூளையும்,  இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும்!!

அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும்,  ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்!!

எனவே முன் எழுந்து முன் மறையும் அதிசய மெலடோனினைப் பெறவும்,  அதிகாலைப் பொழுதின் ஓஸோனைப் பெறவும்,  அனைத்துக்கும் மேலாக அல்லாஹ்வின் அருளைப் பெறவும்..!; ஒரு முஸ்லீம் முன் தூங்கி முன் எழ வேண்டும்!!!

(அறிந்ததை அறியாதோர் கற்கும் நோக்கில் பதிந்த பதிவாளருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!!)

#படியுங்கள்,
#சிந்தியுங்கள்....
#செயல்படுங்கள்,
#பகிருங்கள்...
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢