Sunday 19 February 2017

சீராப்புராணம் கட்டுக்கதை!!!!

●அஸ்ஸலாமு அலைக்கும்.
■ நமது திருமணங்களில்
இவ்வளவு அனாச்சாரங்கள்
 கலக்க காரணம் சீறாபுராணம் எழுதிய உமறு புலவரும் ஒரு காரணம்.
அவர் அலி (ரலி) பாத்திமா திருமணத்தை
ரொம்ப கற்பனை கலந்து எழுதியிருக்கிறார்.
அதை நம்ம மக்களும் மார்க்கம் என செய்ய தொடங்கினர்.
பொய்யிலே பிறந்து பொய்யிலே
வளர்ந்த அந்த புலவர் எழுதிய அந்த திருமணத்தில் அலி ரலி குதிரையில் மாப்பிள்ளையாக வந்தார்கள்.அதன் பாதிப்பு இன்றும் தொடர்ந்ததை பார்த்தோம்.
அந்த பாலைவன பிரதேசத்தில் மாவிலை வாழையிலை தோரணமாம்.
கவிதைக்கு பொய் அழகு என
நிருபித்து இருப்பார்.
ஜிப்ரில் அலை அவர்கள் கருகமணி கொண்டு வந்து கட்ட சொன்னார்கள் என பொய் சொல்லி இருப்பார்.நிறைய வழிகேடுகளுக்கு காரணமாய் இருந்தார்.
பலவித இசைக்கருவிகள் முழங்க
திருமணம் நடந்ததாக எழுதி இருப்பார்.
எல்லாம் மார்க்கத்திற்கு முரணாக.
சகாபாக்கள் எளிமையாக திருமணம் நடத்தியிருக்க அதற்கு மாற்றமாக இந்த புலவரும் புழுகியிருக்க நமது மக்களும் பின்பற்ற தொடங்கினர்.
உலக தலைவர்கள் எல்லோரும் வந்ததாக புழுகி இருப்பார்.
● எளிமையான திருமணத்தில்தான் அல்லாஹ்வின் பரக்கத் (மறைமுக பேரருள்) இருக்கின்றது என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மாஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment