Friday 17 February 2017

இஸ்லாத்தில் முதல் ஜூம்மா!!!

இஸ்லாத்தில் முதலாவது ஆரம்பிக்கப்பட்ட ஜும்ஆ.
https://absaaysha.blogspot.com/2016/11/blog-post_13.html?m=1
இஸ்லாத்தில் முதன் முதலாவது ஜம்ஆவை ஆரம்பித்த பெருமை அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களுக்கே இந்தப் பெருமை சேரும். மக்காவில் நபி (ஸல்) அவர்களால் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுடன் இந்த நபித் தோழர் முதன் முதலில் மதீனாவிற்கு ஒரு மைல் தூரத்தில் உள்ள பனூ பயாழா என்ற ஒரு கூட்டத்தினருக்குச் சொந்தமாக கூழாங் கற்கள் நிறைந்த இடத்தில் அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களின் தலைமையில் கிட்டத்தட்ட நாட்பது பேர்களை உள்ளடக்கிய ஒரு சிறு கூட்டத்தினர் இவரின் தலைமையில் தொழுதார்கள் என்ற வரலாற்றை இப்போது நாம் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய நாற்பதாவது வயதில் அல்லாஹ்வின் தூதர் என்று மக்காவில் பிரச்சாரம் செய்தார்கள் பிரச்சாரம் செய்யும் போது கடுமையான சோதனைகளுக்கும் தொல்லைகளுக்கும் துன்பங்களுக்கும் மத்தியில் இந்த சத்தியப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் செய்து வந்தார்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அந்த மக்கள் தொழுகை நிறைவேற்றும் போது கூட அவர்கள் அனைவர்களும் கூட்டாகத் தொழ முடியாத ஒரு நிர்ப்பந்தமான நிலை இருந்தது.
மக்காவில் நபியாக வாழ்ந்த பதின் மூன்று வருட காலத்தில் அவர்கள் ஜும்ஆவை நடத்த முடியவில்லை. மக்கா வெற்றிக்குப் பிறகுதான் அங்கு ஜும்ஆ நடைபெற்று வந்தது. மக்காவைப் பொறுத்த வரை அறபுக்கள் அனைவர்களும் கஃபாவை புனிதமான ஒரு ஆலயமாகக் கருதி வந்தார்கள். ஹஜ்ஜுடைய காலத்தில் அனைவர்களும் மக்காவிற்கு யாத்திரிகை மேற் கொண்டு மக்காவை நோக்கி வருவார்கள். அப்படி மக்காவிற்கு ஹஜ்ஜுக்கு வரும் மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் தான் இறைத் தூதர் என்பதையும் இஸ்லாத்தினுடைய சட்டதிட்டங்களையும் ஓர் இறைக் கோட்பாட்டையும் சிலை வணக்கத்தையும் எதிர்த்து உள்ளுர் மக்களுக்கு சொல்வது போன்று வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கும் பிரச்சாரம் செய்வார்கள். இப்படி பதின் மூன்று வருட காலம் செய்து வந்தார்கள் இப்படி நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய ஐம்பதாவது வயதில் மதீனாவில் இருந்து ஆறு பேர்கள் கொண்ட ஒரு குழு ஹஜ் செய்வதற்காக வேண்டி வருகை தந்தார்கள். அந்த ஆறு பேர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் போதித்தார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்களின் போதனையைக் ஆறு பேர்களும் கேட்ட போது அவர்களுக்கு ஒரு மன மாற்றம் ஏற்பட்டு இவர் கூறுவது சரியாகத் தோன்றுவதாக அவர்களுக்குள் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டது.
ஆனால் அந்த நேரம்; இஸ்லாத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை நபி (ஸல்) அவர்களை சந்தித்து விட்டு மதீனாவிற்குச் சென்ற இவர்கள் அடுத்த ஆண்டு வரும் போது இந்த ஆறு பேர்களுடன் சேர்ந்து பனிரெண்டு பேர்கள் மதீனாவில் இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக வேண்டி நபி (ஸல்) அவர்களைப் பார்ப்பதற்கு மக்காவிற்கு வருகிறார்கள்.
அடுத்த ஆண்டு ஹஜ்ஜுடைய காலத்தைக் கணித்து வருகிறார்கள் ஏனெனில் ஹஜ்ஜுடைய காலம் அல்லாத காலத்தில் முஹம்மதை சந்திக்க வந்தவர்கள் என்று மக்கா இணைவைப்பாளர்களுக்கு தெரிந்தால் அவர்களுக்கு சொல்லொன்னாத் துன்பதைக் கொடுப்பார்கள் அதனால் தான் அவர்கள் ஹஜ் காலத்தை தேர்வு செய்தார்கள். இந்த பனிரெண்டு பேர்களும் நபி (ஸல்) அவர்களை தனித் தனியாக சந்தித்தார்கள். அவர்கள் அல்லாஹ்வை இறைவனாகவும் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் இறுதித் தூதராகவும் ஏற்றுக் கொண்டதோடு இஸ்லாத்தை வாழ்க்கை நெரியாகவும் ஏற்றுக் கொண்டு உயிருள்ள வரை இஸ்லாத்தை உயிருள்ள வரை பின்பற்றுவதாகவும் இன்னும் பல உடன் படிக்கைகளையும் எடுத்துக் கொண்டு நாங்கள் எங்கள் ஊராகிய மதீனாவிற்குச் சென்று அங்கு இந்த சத்தியப் பிரச்சாரத்தை செய்வதாகவும் நபி (ஸல்) அவர்களுக்கு உறுதி மொழி கொடுத்தார்கள். இவர்கள் ஹஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த அஸ்அத் பின் சுராரா (ரலி) அவர்களின் தலைமையில் முதன் முதலில் இஸ்லாத்தைத் தழுவுகிறார்கள். இவர்கள் தான் இஸ்லாமிய சாம்ராஜியம் மதீனாவில் உருவாகுவதற்கு அடித்தளமிட்டவர்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களில் தலைமையில் இஸ்லாமிய அரசு உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் கஅப் பின் மாலிக், உபாதா பின் அஸ்ஸாமித், உக்பா பின் ஆமிர், பத்ருப் போரில் அபூ ஜஹ்லைக் கொன்ற முஆத் (ரலி) ஆகியோர் அடங்குவார்கள்.
இந்த பன்னிரெண்டு பேர் நபி (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இஸ்லாத்தை எற்றபின் நீங்கள் உங்கள் ஊருக்குச்சென்று ஜும்ஆ தொழுகை நடத்துங்கள் ஏனென்றால் மக்காவில் ஜும்ஆ நடத்த இயலாது. அதனால் நீங்கள் மதீனாவிற்கு சென்று அங்கு ஜும்ஆ தொழுகை நடத்துங்கள் என்று அந்த பன்னிரெண்டு பேரில் அஸ்அத் பின் சுராரா அவர்களுக்கு ஆணை பிறப்பித்தார்கள். அவர் அங்கு சென்று ஜும்ஆவை நடத்தினார்.
இது நபி (ஸல்) அவர்களின் 52 வது வயதில் நடந்தது. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என நியமனம் செய்து 12 வது வருடத்திற்கு பிறகு முதல் ஜு

No comments:

Post a Comment