Wednesday 10 May 2017

பெற்றோர் கவனத்திற்கு!!!!

பெற்றோர்கள் கவனத்திற்கு.. பிளஸ் 2 தேர்வு முடிவு இன்னும் இரண்டே நாளில்...!
இன்னும் இரண்டு நாட்களில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரவிருக்கிறது. பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளிடம் சரியான அனுகுமுறையைக் கையாளுங்கள்.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவர இருக்கும் இந்த நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்கைளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் வெற்றித் தோல்விகளில் அவர்களுடன் இருந்து அவர்களுக்கு முழு பக்கபலமாக இருக்க வேண்டியக் கடமை பெற்றோர்களுக்குத்தான் அதிகமாக உள்ளது.
12ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 12ம் தேதி வெளியாகும். 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 19ம் தேதி வெளியாகிறது என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிந்த சில நாட்களிலேயே பல மாணவர்கள் தேர்வு முடிவைக் குறித்த பயத்தில் வீட்டை விட்டு வெளியேறுதல், தவறான முடிவுகளை எடுத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர்.


பெற்றோர்கள் கவனத்திற்கு
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மனநிலையை நன்றாகப் புரிந்தவர்கள். அதனால் பெற்றோர்கள் குழந்தைகளிடம் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்களைக் குறித்து அதிகமாக விமர்சித்துவிடக் கூடாது. மதிப்பெண் அதிகமாகப் பெற்றால் பாராட்டுங்கள். சற்று குறைந்துவிட்டால் அதற்காக அவர்களைக் காயப்படுத்தாதீர்கள். அவர்களுக்கு ஆறுதலாக இருங்கள்.

 
பக்கபலமாக இருங்கள்
உன்னால் சாதிக்கமுடியும். வெறும் மதிப்பெண்களும் உயர்க்கல்வியும் மட்டும் வாழ்க்கையல்ல என்பதை உங்கள் குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். அவர்கள் விருப்பத்தைக் கேட்டு அதற்கேற்ற உயர்கல்வி படிப்புகளில் அவர்களை சேர்த்துவிடுங்கள். இன்னும் இரண்டு நாட்கள்தான் தேர்வு முடிவு வர விருப்பதால் தங்கள் எதிர்காலமே இந்த தேர்வு முடிவுதான் எப்படி வருமோ என பயந்து கொண்டிருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு தைரியம் கொடுங்கள். அவர்களைத் தனியாக விடாதீர்கள். அவர்கள் மேல் எப்போதும் ஒரு கண் வைத்துக் கொண்டே இருங்கள்...