Thursday 16 February 2017

சமுக வளைதளங்களில் எச்சரிக்கை!!!!

மிகவும் வேதனையோடு
இடும் பதிவு இது.
அது ஒரு அழகான குடும்பம்.
தினமும் தஹஜ்ஜத் தொழுகைக்காக
கணவரை எழுப்பி விட்டு தானும் தொழுகையில் ஈடுபடுவார் மனைவி.
தொழிலில் பிரிந்திருந்த கணவர்
வழமைப் போன்று கைபேசியில் தனது
மனைவியோடு உரையாட முற்பட்ட போது
அது நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.
கவலையடைந்த கணவர் தொழைபேசியில்
தொடர்ப்புக் கொண்டு காரணம் கேட்டார்.
பதில் சொன்னார் மனைவி.
'ஒரு ரோங்கோல் வந்து அடிக்கடி தொல்லைப்
படுத்துவதால் இனிமேல் அதை பாவிப்பதில்லையென '.
எனது இலக்கங்கள் தெரியும் தானே.
அதை கண்டால் மாத்திரம் எடுங்கள்.
மற்றதை பெரிதுப்படுத்த தேவையில்லை.
அதற்காக போணை ஓஃப் பண்ண வேண்டாம்
நான் அடிக்கடி பேச வேண்டும் 'என்றார்
கணவர்.
சிலக்காலம் கடந்தது.
ஒரு நாள் அவரது தாயார் அவசரமாக ஊருக்கு வருப்படி மகனை அழைத்தார்.
வந்ததும் தாயும் அவரது இரண்டு
பிள்ளைகளும் அவரை கட்டிக் கொண்டு
கதறி அழுதனர்.
மனைவி காணாமல் போயிருந்தாள்.
மிகவும் வேதனையில் வீழ்ந்தார் அவர்.
உயிருக்குயிராய் வாழ்ந்தவர்கள்.
தீடீரென என்ன நடந்ததென தவித்தார்.
வணக்க வழிப்பாடுகளில் மிக ஈடுபாடு
கொண்டவராக இருந்தவர்.
ரகசிய பொலிஸ் மூலம் தேடலில் சில
மாதங்கள் நகர்ந்தன.
பிள்ளைகளது அழுகையை கட்டுப் படுத்த
முடியவில்லை. பல ஊடக அறிவிப்பின்
மூலம் தேடலில் பல மாதங்கள் கடந்தன.
ஒரு நாள். . .
ஒரு இளம் பெண்ணின் சடலம் கிடைத்துள்ளதாக ஒரு தகவல் கிடைத்து
உடனே விரைந்தார்.
ஆம். . .
அது அவரது மனைவிதான்.
அதிர்ந்து போனார்.
அவளது கையில் நீண்டதோர் மடல்.
அதை எடுத்து பிரித்துப் பார்த்தார்.
அதில். . .
நான் அந்த போனை ஓஃப் பண்ணியே
வைத்திருக்க வேண்டும்.
அந்த ரோங் நம்பர் தொடர்ச்சியாக தொல்லை
கொடுத்ததால் அவனை திட்டி அதை
கட்டுப் படுத்துவதற்காகவே ஒரு நாள்
ஹான்ஸர் பண்ணினேன்.
ஆனால் அவன் என்னோடு பேசிய விதம்
என் மனதை மாற்றிவிட்டது.
சும்மா பேசுவதில் என்னதான் ஆகப் போகிறது என்ற நினைப்பில் அவன்
பேசும் போதெல்லாம் பேச ஆரம்பித்தேன்.
அவனது கணிவான, கவற்சியான பேச்சுக்கள் மிகவும் பிடித்தது.
அதனால் வேறு எதிலும் ஈடுபட தோன்றுவதில்லை.
என்னை அறியாமலயே எல்லோரையும்,
எல்லாவற்றையும் வெறுக்க ஆரம்பித்தேன்.
அவன் அழைத்ததும் எதையும் யோசிக்க
தோன்றாமல் போய் விட்டேன்.
எனது கையில் இருந்த பணம் முடியும்வரை
நல்லவனாக இருந்தான்.ஆனால்
பணம் முடிந்த பிறகு அவனது சுயரூபத்தை
காட்ட ஆரம்பித்து விட்டான்.
என்னை வைத்து பணம் சம்பாதிப்பதுவே
அவனது திட்டம்.
நான் மிகவும் ஏமாந்து விட்டேன்.
எவ்வளவு அழகான வாழ்கை வாழ்ந்து
கொண்டிருந்தேன். திடீரென்று எனக்கு
என்ன நடந்ததென்று புரியவில்லை.
எனக்கு மீண்டும் உங்களிடம் வர முடியாது.
யார் முகத்தையும் பார்க்கவும் முடியாது.
அதற்காக இப்படியானதொரு
கேவளமான வாழ்கை வாழவும் முடியாது.
தினந்தினம் சாவதை விட இதுவே
முடிவாக ஏற்றுக் கொண்டேன்.
என்னை மன்னித்து விடுங்கள்.
இப்படியாக நீண்டுச் சென்றது அம்மடல்.
இதுபோன்ற சம்பவங்களை தற்காலத்தில்
அடிக்கடி செவியுற முடிகிறது.
மிகவும் வேதனையைத் தருகிறது.
காலத்தால் மாற்ற முடியாத காயத்தை
ஏற்படுத்துகின்ற இதுபோன்ற நிகழ்வுகள்
ஏற்படுவதை தவிர்க்கவும், தடுக்கவும்
பல வழிகள் உண்டு.
முதலில் கணவன், மனைவி பிரிவுகளை
தவிற்க வேண்டும். ஒரு குடும்பத் தலைவன்
பாதுகாப்பதுபோன்று ஒரு குடும்பத்தை
வேறு யாராலும் கண்காணிக்க முடியாது.
அவ்வாறு எதிர்ப்பார்ப்பதும் தவறு.
தொழில்களை குடும்பத்தோடு ஒன்றாய்
இருந்து வாழும் இடத்தில் அமைத்துக்
கொள்ள வேண்டும்.
சைத்தானின் வலையில் வீழ்வது எழிது.
அது எந்த ரூபத்தில் வந்து சேரும் என்பது
யாராலும் உணர முடியாத ஒன்று.
பெண்கள் இச்சமூகத்தின் கண்களாகும்.
இமைகள் இல்லையானால் எந்தக் கண்களையுமே பாதுகாக்க முடியாது.
ஆண்களே. . . .
நீங்கள் இச்சமூகத்தின் தூண்களாக
மட்டுமின்றி கண்களை பாதுகாக்கும்
இமைகளாகவும் மாறி பெண்களை, பேண்
பிள்ளைகளை, குடும்பத்தை பாதுகாருங்கள்.
அது உங்கள் கடமை.
யா அல்லாஹ்.  . .
இதுபோன்ற அவலங்களில் இருந்து
சகல குடும்பங்களையும் காப்பாற்றியருள்.
Writer jareena musthafa

No comments:

Post a Comment