Monday 30 January 2017

மத்ஹபு ஒரு பார்வை

முகநூல் வாட்ஸப் மத்ஹப் காப்பார்கள் பதில் சொல்வார்களா? 

https://absaaysha.blogspot.com/2017/01/blog-post_30.html?m=1

الهداية شرح البداية -  )1/81-82
ومن شك في صلاته فلم يدر أثلاثا صلى أم أربعا وذلك أول ما عرض له استأنف لقوله عليه الصلاة والسلام إذا شك أحدكم في صلاته أنه كم صلى فليستقبل الصلاة

தொழுகையில் ஒருவர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் வந்தால் அவர் தொழுகையை மீண்டும் தொழட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஹிதாயா, பாகம் 2, பக்கம் 81-82

இந்த மத்ஹபில் குறிப்பிடும் இந்தச் செய்தியை நபிகளார் எங்கே சொன்னார்கள்? யாரிடத்தில் சொன்னார்கள்? என்பதற்கு மத்ஹபு ஆதரவாளர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

இதில் குறிப்பிடும் இதே பிரச்சனைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் அழகிய தீர்வு நமக்குச் சொல்லப்பட்டுள்ளது.

உங்களில் ஒருவருக்கு, மூன்று ரக்அத்கள் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா? என்று சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதி உள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுது விட்டு, ஸலாம் கொடுப்பதற்கு முன் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்! அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்கள் அத்தொழுகையை இரட்டைப்படை ஆக்கி விடும். அவர் நான்கு ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும் (தொழுகைகளில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக ஆகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) 
நூல்: முஸ்லிம் 990

தொழுகையில் சந்தேகம் வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நபிகளார் பொதுவாக வழிகாட்டியிருக்க 

மத்ஹப் நூலாசிரியரோ அந்தச் சந்தேகம் வந்தால் மீண்டும் தொழவேண்டும் என்று  ஆதாரமின்றி பதிந்துவுள்ளார்.

அதையடுத்து சந்தேகம் வந்தால் தொழுகையைத் திரும்பத் தொழ வேண்டும் என்று கூறியதோடு நில்லாமல் இதை நபியின் பெயரால் சொல்லியது அவர் செய்த மிகப்பெரிய பிழையாகும்.

ஜஸாக்கல்லாஹூ ஹைரன் அப்ஸா Blog

தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிஞர்கள் மக்களிடையே உரையாற்றிடும் போது அறியாமல் ஹதீஸ்களைத் தவறுதலாகக் கூறி விட்டால் கூட அதற்காக வானத்திற்கும் பூமிக்கும் துள்ளிக்குதித்து எக்காளமிடும் மத்ஹபுக்கூட்டம் நபி சொல்லாததை நபி சொன்னதாக தாங்கள் போற்றும் மத்ஹபு அறிஞர்கள் சொல்லியமைக்கு மௌனம் காப்பதேன்? அவமானகரமான மௌனமிது என்பதில் அறிவுடையோர் சந்தேகிக்க மாட்டார்கள்.

No comments:

Post a Comment